Connect with us

தனுஷ் 51 பட ஷூட்டிங் பூஜையுடன் தொடக்கம்! Viral Pics!

Cinema News

தனுஷ் 51 பட ஷூட்டிங் பூஜையுடன் தொடக்கம்! Viral Pics!

நடிகர் தனுஷ் மற்றும் நாகார்ஜுனா அக்கினேனி, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் DNS (தற்போதைய பெயர்) என்ற படத்தில் இணைந்துள்ளனர். இந்தப்படத்தை தெலுங்கில் ஃபிடா மற்றும் லவ் ஸ்டோரி ஆகிய திரைப்படங்களை எடுத்த தேசிய விருது பெற்ற இயக்குநர் சேகர் கம்முலாவால் இயக்குகிறார். இந்தத்திரை படத்தின் பூஜை விழா இன்று நடந்தது. இந்த பூஜை விழாவில் சுனில் நரங், புஸ்குர் ராம் மோகன் ராவ், பாரத் நரங், ஜான்வி நரங் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.

ஹைதராபாத்தில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு, முதல் கட்டமாக சில முக்கியமான காட்சிகள் படமாக்கப் பட்டுள்ளன. தனுஷ் நடிப்பில் அண்மையில் வெளியான கேப்டன் மில்லர் திரைப்படமும், நாகர்ஜூனாவின் நடிப்பில் வெளியான நா சாமி ரங்கா திரைப்படமும் மக்களிடம் வரவேற்பை பெற்று இருக்கும் நிலையில், இந்தப்படம் மக்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தொழில்நுட்பக் குழுவைப் பொறுத்தவரை, நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்ய, ராமகிருஷ்ணா சப்பானி மற்றும் மோனிகா நிகோத்ரே ஆகியோர் தயாரிப்பு வடிவமைப்பைக் கவனிக்கின்றனர். சர்வதேச சண்டைப் பயிற்சி இயக்குநரான யானிக் பென், ஆக்‌ஷன் பகுதியை மேற்பார்வையிட நியமிக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி (ஏசியன் குழுமத்தின் ஒரு பிரிவு) நிறுவனம் சார்பில், அமிகோஸ் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் உடன் இணைந்து, சோனாலி நரங் வழங்க பிரமாண்டமாக இந்தப்படம் தயாரிக்கப்படுகிறது. முன்னதாக தனுஷ் தன்னுடைய 50 வது திரைப்படத்தை தானே எழுதி நடித்திருக்கிறார். இந்தப்படத்தை தொடர்ந்து இன்னொரு படத்தின் டைரக்‌ஷன் பணியை தொடங்கி இருக்கும் அவர், தற்போது இந்தப்படத்தில் கமிட் ஆகி இருக்கிறார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top