Connect with us

வெளியானது கேப்டன் மில்லர் படத்தின் Second Single பாடல்!

Cinema News

வெளியானது கேப்டன் மில்லர் படத்தின் Second Single பாடல்!

தனுஷ் இயக்கும் மூன்றாவது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் டிசம்பர் 24ஆம் தேதி வெளியாகும் என்று அவரே தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்தார் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் அதற்கு முந்தைய நாள் அதாவது டிசம்பர் 23ஆம் தேதி தனுஷ் நடித்து முடித்துள்ள ’கேப்டன் மில்லர்’ படத்தின் சிங்கிள் பாடல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ’கேப்டன் மில்லர்’ படத்தின் முதல் சிங்கிள் பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை வெற்ற நிலையில் தற்போது இரண்டாவது சிங்கிள் பாடல் டிசம்பர் 23ஆம் தேதி இன்று மாலை 5 மணிக்கு வெளியானது குறிப்பிடதக்கது.

’உன் ஒளியிலே’ என்று தொடங்கும் இந்த பாடல் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. GV பிரகாஷின் மெலடி பாடலாக உருவாகி இருக்கும் இந்த பாடல் தனுஷ் மற்றும் பிரியங்கா மோகன் ரொமான்ஸ் டூயட் பாடலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்தப்பாடலை கபீர் வாசுகி எழுதியுள்ளார். பாடலை ஷான் ரோல்டன் பாடியுள்ளார்.

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் GV பிரகாஷ் இசையில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி உள்ள இந்த படத்தில் தனுஷ், பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், சந்தீப் கிஷான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் என்பதும் இந்த படம் பொங்கல் தினத்தில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக திரையரங்குகளில் பெரியதாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  என்னென்ன பண்ணிருக்காங்க பாருங்க - 'அரண்மனை-4' படத்தின் BTS புகைப்படங்களை பகிர்ந்து நடிகை தமன்னா நெகிழ்ச்சி..!!

More in Cinema News

To Top