Connect with us

குட் பேட் அக்லி, தக் லைஃப் படத்தின் மொத்த வசூல் – ஒரே நாளில் ரெக்கார்ட் சாதனை..

Featured

குட் பேட் அக்லி, தக் லைஃப் படத்தின் மொத்த வசூல் – ஒரே நாளில் ரெக்கார்ட் சாதனை..

இந்த ஆண்டில் வெளியாகிய திரைப்படங்களில், குட் பேட் அக்லி, குடும்பஸ்தன், டிராகன், டூரிஸ்ட் பேமிலி, மாமன் மற்றும் மதகஜராஜா ஆகியவை மாபெரும் வெற்றியை பெற்றுள்ளன. பெரும்பாலும் குடும்பவழி மற்றும் ஆக்ஷன் கலந்த காமெடி படங்களாக இருந்த இவை, ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பைப் பெற்றன.

மாறாக, தக் லைஃப் மற்றும் விடாமுயற்சி போன்ற படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியாமல், ரசிகர்களுக்கு ஏமாற்றம் ஏற்படுத்தின. இந்த நிலையில், முன்னணி நடிகர்களின் படங்கள் வரிசையில், நடிகர் தனுஷ் நடித்த குபேரா திரைப்படம் வெளியாகியுள்ளது. இந்த படம் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகியதாகும். இதில் தனுஷ் உடன் ராஷ்மிகா மந்தனா மற்றும் நாகர்ஜுனா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

திரைப்படம் வெளியானதும் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. சிலர் படம் சுவாரசியமாக உள்ளது என்று பாராட்டினர். மற்றொருபுறம் சிலர் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்ற விமர்சனங்களையும் தெரிவித்தனர்.

இருப்பினும், இப்படம் வசூலில் சாதனை படைத்துள்ளது. தெலுங்கு மொழியில் மட்டும், வெளியீட்டு நாளிலேயே ரூ. 10 கோடி வசூலித்துள்ளது. இதன்மூலம், குட் பேட் அக்லி மற்றும் தக் லைஃப் ஆகிய திரைப்படங்கள் தெலுங்கில் வெளியான நாள் மேற்கொண்ட வசூலைவிட அதிகம் வசூலித்து, குபேரா முன்னிலை பெற்றுள்ளது. இதன் மூலம், தனுஷின் குபேரா திரைப்படம், வசூல் ரீதியில் இந்தாண்டு வெளியாகிய முக்கிய திரைப்படங்களில் இடம் பிடித்துள்ளதாக கூறலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  💫 சிம்பு பாராட்டிய காதல் படம் “ஆரோமாலே” 💞 | New Gen Romantic Film from Tamil Cinema 🎬

More in Featured

To Top