Connect with us

குபேரா படம் முதல் நாள் வசூல்: எத்தனை கோடி தெரியுமா..

Featured

குபேரா படம் முதல் நாள் வசூல்: எத்தனை கோடி தெரியுமா..

இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடித்துள்ள “குபேரா” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தில் தனுஷுடன் இணைந்து நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் நாகர்ஜுனா முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகிய “குபேரா” திரைப்படம், வெளியான நாளிலிருந்தே ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. பலரும் படத்தின் நீளம் தான் இதற்கான முக்கியக் காரணமாக கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், “குபேரா” திரைப்படத்தின் முதல் நாள் வசூல் விவரம் தற்போது வெளியாகியுள்ளது. உலகளவில் இப்படம் வெளியான முதல் நாளில் ரூ. 25 கோடி வருமானம் பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை தொடர்ந்து வரும் நாட்களில் இப்படம் எப்படி வசூல் செய்யும் என்பது ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top