Connect with us

அதிக சம்பளம் பெறும் நடிகர்களின் பட்டியலில் தனுஷ்.. அடேங்கப்பா, இத்தனை கோடிகளா!

Featured

அதிக சம்பளம் பெறும் நடிகர்களின் பட்டியலில் தனுஷ்.. அடேங்கப்பா, இத்தனை கோடிகளா!

தமிழ் சினிமாவில் தனது பயணத்தைத் தொடங்கி, இன்று ஹாலிவுட் வரை செல்வாக்கை எடுத்துள்ளவர் நடிகர் தனுஷ். நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடகர் மற்றும் எழுத்தாளர் என பன்முக திறமை கொண்டவர்.

இவர் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த திரைப்படம் ‘குபேரா’. இந்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கியுள்ளார். ராஷ்மிகா மந்தனா மற்றும் நாகர்ஜுனா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தமிழை விட, இந்த படம் தெலுங்கில் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. முதல் வாரத்திலேயே படம் மாஸ் ஹிட்டாக, தெலுங்கு பிரதேசத்தில் வசூலை வசீகரிக்கிறது. சில நாட்களில் இந்த திரைப்படம் ரூ. 100 கோடி வருமானத்தைக் கடந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனுடன், தெலுங்கு திரையுலகிலும் தனுஷுக்கு தனி மார்க்கெட் உருவாகியுள்ளது.

தற்போது, தனுஷ் இயக்கி வரும் ‘இட்லி கடை’ திரைப்படம் வெற்றியடைந்தால், அவர் பெறும் சம்பளம் ரூ. 50 கோடி வரை உயரலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ் சினிமாவில் இதுவரை ரூ. 50 கோடிக்கு மேல் சம்பளம் பெற்றவர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் மற்றும் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட சிலர் மட்டுமே. தற்போது, இந்த பட்டியலில் விரைவில் தனுஷும் இணைவார் என திரைத் துறையில் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “ரிவால்வர் ரீட்டா 2 நாட்களில் எவ்வளவு வசூல்? Fans Shock! 😱”

More in Featured

To Top