Connect with us

இன்ப அதிர்ச்சி தந்த தனுஷ் – ஐஸ்வர்யா: எறும்பு ஊர கல்லும் தேயும் போல மீண்டும் சேர்கிறார்களா?

Featured

இன்ப அதிர்ச்சி தந்த தனுஷ் – ஐஸ்வர்யா: எறும்பு ஊர கல்லும் தேயும் போல மீண்டும் சேர்கிறார்களா?

“எறும்பூர கல்லும் தேயும்” என்பது போல, தனுஷும், ஐஸ்வர்யாவும் தங்களது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுக்காக மீண்டும் இணைந்துள்ளனா? என்பது ரசிகர்களிடம் பல்வேறு எதிரொலிகளை ஏற்படுத்தியுள்ளது. பயில்வான் ரங்கநாதன், Paper Weight Tamil யூடியூப் சேனலுக்குக் கொடுத்த பேட்டியில், “தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா மீண்டும் இணைகிறார்கள். இது யாத்ரா, லிங்காவுக்கே இன்ப அதிர்ச்சி மட்டுமல்ல; ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் ரசிகர்களுக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது” எனத் தெரிவித்தார்.

தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினர் முன்னதாகவே தாங்கள் பிரிந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து, விவாகரத்துக்காக நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளனர். இருப்பினும், பிள்ளைகளின் பள்ளி நிகழ்ச்சிகளில் இருவரும் பங்கேற்கும் வகையில், பெற்றோர் பாசத்தால் ஒன்று சேர்ந்துள்ளனர். சமீபத்தில், யாத்ரா பட்டம் பெற்ற விழாவில், இடது கரத்தில் ஐஸ்வர்யா, வலது கரத்தில் தனுஷ் ஆகியோருடன் யாத்ரா நின்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியில், இருவரும் பக்கத்தில் உட்கார்ந்திருந்ததோடு, ரஜினிகாந்தும் “என் பேரன் வாழ்க்கையில் இது ஒரு மைல்கல்” என்று கூறினார்.

இது போல, பிரிந்தாலும் உள்ளத்தில் இணைந்திருக்கிறார்கள் என்பதை நிரூபிக்கிறார்கள் தனுஷும், ஐஸ்வர்யாவும். பிள்ளைகளுக்காக ஒருவரையொருவர் மதித்து நடப்பது, பிரிந்த பிற பிறந்தஜோடிகளுக்கும் முன்மாதிரியானது என பத்திரிகையாளர் கருத்து தெரிவித்தார். இதே பேட்டியில் அவர், “பிரபலம் ராமராஜன் – நளினி, பார்த்திபன் – சீதா ஆகிய ஜோடிகள் பிரிந்தபோதிலும், பிள்ளைகள் தொடர்பான நிகழ்ச்சிகளில் ஒன்றிணைகிறார்கள். ஆனால், இன்றைய சில நடிகர்கள் விவாகரத்துக்காக உற்சாகமாக இருப்பது கவலிக்கிடம்” என்றும் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில், தனுஷ் சமீபத்தில் பதிவிட்ட ஒரு கருத்து ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. “நீங்கள் என்னை எவ்வளவு வேண்டுமானாலும் கிண்டல் செய்யலாம், வதந்தி பரப்பலாம். ஆனால் ஒரு செங்கல்லையும் அசைக்க முடியாது. என் ரசிகர்கள் எனது தீப்பந்தம். அவர்களே என் வழிகாட்டி,” என அவர் பதிவிட்டிருந்தார். இதில் முக்கியமான செய்தி என்னவென்றால், விவாகரத்து செய்த பிறகு தொடர்ந்து வலுப்பெற வேண்டும் என்றால், ரசிகர்களின் நம்பிக்கையை இழக்காமல் இருத்தல் அவசியம். தனுஷ் – ஐஸ்வர்யா ஜோடி, பிரிந்தாலும், மகன்களின் பாசத்தால் மீண்டும் ஒரு குடும்ப உணர்வோடு காணப்படுவதை பலரும் பாராட்டுகிறார்கள்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top