Connect with us

பிறந்தநாளில் தம்பி நகுலுடன் செம ஆட்டம் போட்ட தேவயானி… வைரலாகும் வீடியோ!

Featured

பிறந்தநாளில் தம்பி நகுலுடன் செம ஆட்டம் போட்ட தேவயானி… வைரலாகும் வீடியோ!

தொட்டாச் சிணுங்கி (1995) திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை தேவயானி. அதன் பின்னர் காதல் கோட்டை திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அவர் பலரின் கனவுக் கன்னியாக மாறினார். தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அதோடு சின்னத்திரையிலும் தனக்கென ஒரு தனித்த அடையாளம் அமைத்துள்ளார்.

இயக்குநர் ராஜகுமாரனுடன் பெற்றோரின் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்துகொண்ட தேவயானிக்கு தற்போது இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இவரில் மூத்த மகள் இனியா ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் ‘சரிகமபா சீசன் 5’ நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பாடி வருகிறார்.

நேற்று ஜூன் 22ஆம் தேதி நடிகை தேவயானி தனது 51வது பிறந்தநாளை கொண்டாடினார். ரசிகர்கள், சினிமா பிரபலர்கள் என பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். தனது குடும்பத்துடன் பாடல், நடனம் மற்றும் விருந்து நடத்தி மகிழ்ச்சியாக பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதி ஆக, தேவயானி தனது தம்பி நகுலுடன் நடனம் ஆடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்களிடையே இதற்கான வரவேற்பும் பரவலாக காணப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பிக்பாஸ் வீட்டில் பாசமா? பாசாங்கா? – கலையரசன் பேட்டியில் வெளிவந்த ‘லவ் ஸ்ட்ராட்டஜி’ ரகசியம்!

More in Featured

To Top