Connect with us

பாக்ஸ் ஆபிசில் பட்டய கிளப்பும் டிமான்டி காலனி 2 – வசூலுடன் கூடிய சிறப்பு போஸ்ட்டரை வெளியிட்டது படக்குழு..!!

Cinema News

பாக்ஸ் ஆபிசில் பட்டய கிளப்பும் டிமான்டி காலனி 2 – வசூலுடன் கூடிய சிறப்பு போஸ்ட்டரை வெளியிட்டது படக்குழு..!!

ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்று திரையரங்குகளில் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் டிமாண்டி காலனி 2 படத்தின் லேட்டஸ்ட் வசூலுடன் கூடிய சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

திரில்லர் படங்களுக்கு முடி சூடா மன்னனாக திகழும் நடிகர் அருள் நிதியின் நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு புதிய வித ஹாரர் படமாக வெளியான திரைப்படமே ‘டிமாண்டி காலனி’ . காட்சிக்கு காட்சி ஏராளமான ட்விஸ்டுகளும் ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமரவைத்தது மட்டுமல்லாமல் வசூலிலும் இப்படம் பட்டய கிளப்பியது.

இதையடுத்து அஜய் ஞானமுத்து இயக்கத்தில் இப்படத்தின் இரண்டாம் பாகம் விறுவிறுப்பாக உருவாகி வந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது .

முதல் பாகத்தை போலவே இப்படத்தில் நடிகர் அருள் நிதி சிறப்பான நடிப்பை வெளியிப்படுத்த அவருடன் இணைந்து பிரியா பவனி சங்கரும் கலக்கி உள்ளார் .

இந்நிலையில் இப்படத்தின் லேட்டஸ்ட் வசூல் விவரத்தை படக்குழு சிறப்பு போஸ்டருடன் வெளியிட்டுள்ளது . அதன்படி ரசிகர்களின் பேராதரவை பெற்றுள்ள இப்படம் 55 கோடி வசூலை குவித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top