Connect with us

தனுஷின் D54 பட பூஜை – புகைப்படங்கள் வெளியானது..

Featured

தனுஷின் D54 பட பூஜை – புகைப்படங்கள் வெளியானது..

இந்திய திரைப்பட உலகில் தில்லாலங்கடி நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த நடிகர் தனுஷ் தற்போது புதிய படமொன்றில் நடிக்கவிருக்கிறார். ‘போர் தொழில்’ படத்திற்கு பிறகு, இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படமே ‘D54’. இப்படத்தை வேல்ஸ் திரைப்பட நிறுவனம் தயாரிக்கிறது.

இந்தப் படத்தில் இளம் சென்சேஷனலான நடிகை மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இந்நிலையில், இன்று இப்படத்தின் பூஜை விமரிசையாக நடைபெற்றது. இதில் நடிகர் தனுஷின் நெருங்கிய நண்பரும், அவன் ஆஸ்தான இயக்குநருமான வெற்றிமாறன் கலந்து கொண்டார். இவருடன், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ள இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் மற்றும் நடிகர் கருணாஸும் கலந்து கொண்டனர்.

இன்று காலை D54 படத்தின் முதலாவது போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை தூண்டியது. அதனைத் தொடர்ந்து தற்போது, படப்பூஜை நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளன. படக்குழுவின் இந்த ஆரம்ப நிகழ்வுகள் ரசிகர்களிடையே பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  🎬🔥 மணி ரத்னம் – விஜய் சேதுபதி – சாய் பல்லவி கூட்டணி? வதந்தி வைரல்!

More in Featured

To Top