Connect with us

6 நாட்களில் 3BHK திரைப்படம் செய்த வசூல் வெளியில்! எவ்வளவு தெரியுமா?

Featured

6 நாட்களில் 3BHK திரைப்படம் செய்த வசூல் வெளியில்! எவ்வளவு தெரியுமா?

நடிகர் சித்தார்த் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘3BHK’ திரைப்படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியானது. தரமான கதைக்களம் மற்றும் யதார்த்தமான இயக்கம் மூலம் பெரிதும் பாராட்டை பெற்ற இப்படத்தை, இயக்குநர் ஸ்ரீ கணேஷ் இயக்கியிருக்கிறார்.

ஷாந்தி டாக்கீஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான இப்படத்தில் சித்தார்த், சரத்குமார், தேவயானி, மீதா ரகுநாத் மற்றும் சைத்ரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் விவரணையான கதையும், கதாபாத்திரங்களின் நிஜத்தன்மையும் ரசிகர்களை ஈர்த்துள்ளது.

மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படம், வெளியான முதல் நாளிலிருந்து வசூலிலும் சிறப்பாக திகழ்கிறது. இந்நிலையில், ‘3BHK’ திரைப்படம் உலகளவில் வெளியான 6 நாட்களில் ரூ. 7.5 கோடி வரை வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போதைய வசூல் நிலவரத்தைப் பொறுத்தவரை, இப்படம் தியற்றத்தில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. வருகிற நாட்களிலும் இப்படத்தின் வசூல் நிலை மேலும் உயர வாய்ப்பு உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top