Connect with us

2025 ஐபிஎல் தொடரில் விளையாடுவது குறித்து சிஎஸ்கே வீரர் எம்.எஸ்.தோனி ஓபன் டாக்..!!

Featured

2025 ஐபிஎல் தொடரில் விளையாடுவது குறித்து சிஎஸ்கே வீரர் எம்.எஸ்.தோனி ஓபன் டாக்..!!

2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விளையாடுவது குறித்து சென்னன சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரரான எம்.எஸ்.தோனி வெளிப்படையாக பேசியுள்ளார்.

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருக்கும் மிகவும் பிடித்த தொடராக இருப்பது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தான் . 10 அணிகள் பங்கேற்று விளையாடும் இந்த தொடரில் விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் எப்போதும் பஞ்சம் இருக்காது .

அதிலும் குறிப்பாக இந்த ஐபிஎல் தொடரில் சென்னை , மும்பை , மற்றும் பெங்களூரு அணிகளுக்கு மற்ற அணிகளை விட வெறித்தனமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது . இதற்கு முக்கிய காரணம் சென்னை அணியின் அனிருக்கும் பிடித்த எம்.எஸ்.தோனியும் , மும்பை அணியில் ரோஹித்தும் , பெங்களூரு அணியில் கோலியும் இடம்பெற்றிருப்பது தான் .

இந்நிலையில் கடைசியாக நடைபெற்ற தொடரில் சென்னை அணியில் இளம் வீரர் ருதுராஜை கேப்டன் ஆக்கிவிட்டு தோனி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக செயல்பட்டார் . அந்த தொடரில் என்னதான் சென்னை அணி சிறப்பாக விளையாடினாலும் இறுதி வரை அந்த அணியால் செல்ல முடியவில்லை .

இதையடுத்து 2025 ஐபிஎல் தொடரில் தோனி இடம்பெறுவாரா இல்லை ஓய்வு பெறுவாரா என்ற கேள்வி அணைத்து கிரிக்கெட் ரசிகர்களின் மனத்தில் ஆழமாக எழுந்துள்ளது. இதற்கு நம்ப எம்.எஸ்.தோனியே தற்போது பதில் கொடுத்துள்ளார்.

அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட தோனியிடம் 2025 ஐபிஎல் தொடரில் விளையாடுவீர்களா என்ற கேள்வி எழுப்பப்பட்டது இதற்கு பதிலளித்த தோனி கூறியதாவது :

“ஐபிஎல்-ல் விளையாடுவது குறித்து யோசிக்க நிறைய நேரம் இருக்கிறது. எத்தனை வீரர்களை தக்க வைத்துக்கொள்ள கிரிக்கெட் வாரியம் அனுமதி கொடுக்கவுள்ளது என்பதை பொறுத்து உள்ளது. எங்கள் கையில் எதுவும் இல்லை. அடுத்த சீசனுக்கான விதிமுறைகள் தெரிந்தபின் நான் என் முடிவை எடுப்பேன். அது அணியின் நலனுக்கானதாக இருக்க வேண்டியது அவசியம்!” என எம்.எஸ்.தோனி தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top