Connect with us

தமிழகத்தில் தொடர்ந்து வேகமெடுக்கும் கொரோனா பாதிப்பு – இன்று மட்டும் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது தெரியுமா..?

Featured

தமிழகத்தில் தொடர்ந்து வேகமெடுக்கும் கொரோனா பாதிப்பு – இன்று மட்டும் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது தெரியுமா..?

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தற்போது தமிழகத்திலும் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வருவதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

உலக மக்கள் அனைவரையும் கடந்த 4 வருடங்களாக படாதபாடு படுத்திய கொரோனா வைரஸ் தொற்று சீனாவில் உள்ள உகான் மாகாணத்தில் இருந்து முதன் முதலில் பரவ தொடங்கியதாக கூறப்படுகிறது.அங்கு தொடங்கிய அந்த தொற்று படிப்படியாக பரவி கோடான கோடி மக்களை வேட்டையாடியது.

உலக நாடுகளை நடுங்கவைத்த கொரோனா இந்தியாவையும் விட்டுவைக்காமல் அங்கேயும் தலைவிரித்தாடியது இங்கும் பல உயிர்களை கொன்று குவித்த இந்த பெருந்தொற்று இந்த வருடம் சற்று பம்மி இருந்த நிலையில் தற்போது மீண்டும் மெல்ல மெல்ல தலை காட்டி வருகிறது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 5 பேருக்கும், கோவை மற்றும் வேலூரில் தலா 2 பேருக்கும், செங்கல்பட்டு, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருத்தருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் 139 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 4 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  💣 ₹59.5 Crore Day 1! Akhanda 2-க்கு ரசிகர்கள் தந்த Mega Response 😱🔥

More in Featured

To Top