Connect with us

‘அயலான்’ பட இயக்குனருக்கு கிடைத்த மாபெரும் பரிசு – குவியும் வாழ்த்துக்கள்

Cinema News

‘அயலான்’ பட இயக்குனருக்கு கிடைத்த மாபெரும் பரிசு – குவியும் வாழ்த்துக்கள்

அயலான் பட இயக்குனர் ரவிக்குமாரின் குடும்பத்தில் இன்று மகிழ்ச்சியான சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

தமிழ் சினிமாவில் வெறும் இரண்டு படங்கள் மட்டுமே எடுத்து ரசிகர்களின் மனதில் தனக்கென தனி இடம் பிடித்தவர் தான் ரவிக்குமார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு ’இன்று நேற்று நாளை’ என்ற திரைப்படத்தை இயக்கிய ரவிக்குமாருக்கு அந்த படம் மிகப்பெரிய வெற்றியை தேடி தந்தது.

இதையடுத்து ரவிக்குமாரின் இயக்கத்தில் உருவான திரைப்படம் தான் ’அயலான்’ மிக பெரிய பட்ஜெட்டில் உருவான இப்படம் இன்று வெளியாகும் நாளை வெளியாகும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது .

ஆனால் மனம் கலங்காத ரவிக்குமார் இப்படத்தின் ரிலீசுக்காக வேறு இந்த படத்தையும் இயக்காமல் திட்டத்தட்ட 9 ஆண்டுகள் காத்திருந்தார்.

ஒரு வழியாக இப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன் திரையரங்குகளில் கோலாகலமாக வெளியானது.குழந்தைகளுக்கு மிகவும் பிடித்துப்போன இப்படம் டீசெண்டான் வெற்றியை ருசித்தது.

இந்நிலையில் இயக்குனர் ரவிக்குமாருக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்துள்ளார்.

திருப்பூரை பூர்விகமாக கொண்ட இவருக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு பிரியா கணேசன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது .

இந்த தம்பதிக்கு ஏற்கனவே ஒரு மகள் உள்ள நிலையில் தற்போது இவர்களுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தனது சமூக வலைதளத்தில் ரவிகுமார் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கேரளாவில் முதல்முறையாக வரலாற்றில் பெயர் பதித்த லோகா!

More in Cinema News

To Top