Connect with us

போக்சோ வழக்கில் கைதான நடன இயக்குநர் ஜானிக்கு இடைக்கால ஜாமின்..!!

Cinema News

போக்சோ வழக்கில் கைதான நடன இயக்குநர் ஜானிக்கு இடைக்கால ஜாமின்..!!

போக்சோ வழக்கில் கைதான நடன இயக்குநர் ஜானிக்கு ரங்கா ரெட்டி மாவட்ட நீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியுள்ளது.

தென்னிந்திய திரையுலகில் பிரபல நடன இயக்குநராக வலம் வருபவர் ஷேக் ஜானி பாஷா. தனது புதுவிதமான நடனத்தால் ரசிகர்களை கவர்ந்த இவருக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

இந்நிலையில் ஜானி மாஸ்டரிடம் துணை நடன இயக்குனராக வேலை செய்து வந்த பெண் ஒருவர் தன்னை பலாத்காரம் செய்ததாக போலீசில் புகார் கொடுத்திருந்தார் . அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் ஜானி மாஸ்டர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து அவரை சிறையில் அடைந்தனர்.

இந்த வழக்கு ஒரு பக்கம் நடந்துகொண்டிருக்க தேசிய விருது வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக ஜானி மாஸ்டர் ஜாமின் கேட்டு நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார்.

இதையடுத்து இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்ற நிலையில் நடன இயக்குநர் ஜானிக்கு இடைக்கால ஜாமின் வழங்கி ரங்கா ரெட்டி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ‘ப்ரோ கோட்’ தலைப்பு வழக்கு: கோர்ட் அதிரடி உத்தரவு

More in Cinema News

To Top