Connect with us

பட்டென பிளந்த மேடை நூலிழையில் உயிர் தப்பிய நடிகை பிரியங்கா மோகன் – திக் திக் வீடியோ..!!

Cinema News

பட்டென பிளந்த மேடை நூலிழையில் உயிர் தப்பிய நடிகை பிரியங்கா மோகன் – திக் திக் வீடியோ..!!

தெலங்கானாவில் நடிகை பிரியங்கா மோகன் பங்கேற்ற நிகழ்ச்சியில் திடீரென மேடை சரிந்து விழுந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

தென்னிந்திய திரையுலகில் தற்போது இருக்கும் முன்னணி இளம் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை பிரியங்கா மோகன். தமிழ் , தெலுங்கு என பல மொழிகளில் பல முன்னணி ஹீரோக்களுடன் கை கோர்த்து பல படங்களில் நடித்து வருகிறது.

அந்தவகையில் ஜெயம் ரவியுடன் இவர் ஜோடி சேர்நது நடித்துள்ள பிரதர் திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் தெலங்கானாவில் நடிகை பிரியங்கா மோகன் பங்கேற்ற நிகழ்ச்சியில் திடீரென மேடை சரிந்து விழுந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

தெலங்கானாவில் நடை பெற்ற நிகழ்ச்சியில் நடிகை பிரியங்கா மோகன் சிறப்பு விருந்தினராக இன்று பங்கேற்றார் அப்போது மேடையில் நின்று ரசிகர்களிடம் அவர் உரையாடிக்கொண்டிருந்த போது திடீரென மேடை சரிந்து விழுந்துள்ளது . இதில் பிரியங்கா மோகன் உட்பட மேடையில் இருந்த அனைவரும் கீழே விழுந்தனர்.

இதையடுத்து தான் லேசான காயங்களுடன் உயிர் தப்பினேன். எனது உடல்நலம் குறித்து விசாரித்த அனைவருக்கும் நன்றி. விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விழைகிறேன் என தனது சமூக வலைதள பக்கத்தில் நடிகை பிரியங்கா மோகன் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top