Connect with us

ஆஸ்கருக்கு அனுப்ப ‘லாபதா லேடீஸ்’ திரைப்படத்தை தேர்வு செய்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்..!!

Cinema News

ஆஸ்கருக்கு அனுப்ப ‘லாபதா லேடீஸ்’ திரைப்படத்தை தேர்வு செய்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்..!!

ஆஸ்கருக்கு அனுப்ப ‘லாபதா லேடீஸ்’ திரைப்படத்தை தேர்வு செய்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

விரைவில் நடைபெற உள்ள ஆஸ்கர் விருது வழங்கும் விழாவிற்கு உலகில் உள்ள பல மொழி படங்கள் பரிந்துரைக்கப்பட்டு வரும் நிலையில் இந்திய சினிமா சார்பில் சில திரைப்படங்கள் பரிந்துரைக்கப்பட்டு வருகிறது. அதில் ‘லாபதா லேடீஸ்’ திரைப்படமும் ஒன்று.

இப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெட்ரா நிலையில் நிலையில் ஆஸ்கர் செல்ல மேலும் சில படங்கள் உள்ளது என பலரும் எதிர்மறை கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆஸ்கருக்கு அனுப்ப ‘லாபதா லேடீஸ்’ திரைப்படத்தை தேர்வு செய்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஜெயக்குமார் கூறிருப்பதாவது :

கொட்டுக்காளி, தங்கலான், வாழை, மஹாராஜா உள்ளிட்ட கதையும், கருத்தும், தாக்கமும் மிகுந்த தமிழ் படங்கள் ஆஸ்கர் விருதிற்கு பரிந்துரைப்பதற்கான பட்டியலில் இருந்தும், இந்தி திரைப்படம் என்ற ஒரே காரணத்திற்காக ‘லாபதா லேடீஸ்’ திரைப்படத்தை தேர்வு செய்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.

‘லாபதா லேடீஸ்’ பல்வேறு கருத்துக்களை நகைச்சுவையோடு சொன்னாலும் உணர்வுப்பூர்வமாக இல்லை என்பதே உண்மை! என்ன மொழியில் படம் உள்ளது என்பதை பார்க்காமல் திரை மொழியில் மக்கள் வாழ்வியலுடன் உணர்ந்து பார்த்த படங்களை அங்கீகரிப்பதே ஆஸ்கருக்கு நாம் போடும் அடித்தளம்.

இந்தியாவில் மட்டும் தான் ஆஸ்கர் விருதிற்கான தேர்வின் விதத்தினால் திரைப்படம் இங்கேயே தோற்று விடுகிறது என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ராஷ்மிகா-விஜய் தேவரகொண்டா திடீர் நிச்சயதார்த்தம்: திருமணத் தேதி குறித்து புதிய தகவல் வெளியீடு

More in Cinema News

To Top