Connect with us

சியான் விக்ரத்தின் சொத்து மதிப்பு.. பிறந்தநாள் ஸ்பெஷல்..

Featured

சியான் விக்ரத்தின் சொத்து மதிப்பு.. பிறந்தநாள் ஸ்பெஷல்..

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சியான் விக்ரம். ரசிகர்கள் அவரை காதலோடு சியான் என அழைக்கிறார்கள். ஒவ்வொரு படத்துக்கும் தனது உடலை, தோற்றத்தை, நடிப்பை பலமடங்கு மாற்றும் திறமை கொண்டவர். அந்நியன், ஐ, தங்கலான்… இவை எல்லாம் இதற்கான சிறந்த உதாரணங்கள்.

சமீபத்தில் வெளியான வீர தீர சூரன் திரைப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவே அந்த வரவேற்புக்கு சாட்சி. இப்போது, இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கும் புதிய படத்தில் சியான் விக்ரம் நடிக்கவிருக்கிறார்.

இன்று சியான் விக்ரமின் 59வது பிறந்தநாள். ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் தொடர்ந்து வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, விக்ரமின் சொத்து மதிப்பு குறித்த தகவலும் வெளியாகியுள்ளது. தற்போது கிடைத்த தகவலின்படி, அவரது சொத்து மதிப்பு ரூ. 200 கோடி முதல் ரூ. 250 கோடி வரையில் இருக்கலாம் என கூறப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  திரைக்கதை ஜாம்பவான் கே. பாக்யராஜ் காலமானார்

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top