Connect with us

“விக்ரம் நடிப்பில் வெளியாகவுள்ள துருவ நட்சத்திரம் படத்தின் முதல் விமர்சனம்!!”

Cinema News

“விக்ரம் நடிப்பில் வெளியாகவுள்ள துருவ நட்சத்திரம் படத்தின் முதல் விமர்சனம்!!”

துருவ நட்சத்திரம் திரைப்படம் குறித்து இயக்குநர் லிங்குசாமி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். அந்த பதிவில், “மும்பையில், துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் ஃபைனல் கட்டை பார்க்க நேர்ந்தது. படம் மிக நன்றாக இருக்கிறது. படம் சிறப்பான முறையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஒளிப்பதிவு மிகச் சிறப்பாக வந்திருக்கிறது. நடிகர் விகரம் மிகவும் கூலாக நடித்திருக்கிறார். விநாயகன் படத்தில் உள்ள அனைத்தையும் திருடி விட்டார்.

நிறைய நடிகர்கள் இருக்கிறார்கள். எல்லாருமே மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். வாழ்த்துகள் கெளதம் மேனன். நீங்களும், ஹாரிஸ் ஜெயராஜூம் இணைந்து, இன்னொரு ரத்தினத்தை கொடுத்திருக்கிறீர்கள். திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைய என்னுடைய வாழ்த்துகள்!” என்று பதிவிட்டு இருக்கிறார்.

இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில், நடிகர் விக்ரம் முதன்மை பாத்திரத்திலும், ஐஸ்வர்யா ராஜேஷ், ரிது வர்மா, பார்த்திபன், சிம்ரம், டிடி, ராதிகா, மாயா உள்ளிட்ட பலர் துணை கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கும் திரைப்படம் துருவ நட்சத்திரம்.

ஸ்பை த்ரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் இந்தத்திரைப்படம் பல வருடங்களாக நிதி நெருக்கடியால் கிடப்பில் போடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் துருவநட்சத்திரம் திரைப்படம் டிசம்பர் 24ம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top