Connect with us

சிறுவயதில் உயிரிழந்த சித்ராவின் மகள்… நினைவு நாளில் சித்ரா பகிர்ந்த பதிவு!

Featured

சிறுவயதில் உயிரிழந்த சித்ராவின் மகள்… நினைவு நாளில் சித்ரா பகிர்ந்த பதிவு!

உலக புகழ்பெற்ற பின்னணி பாடகி கே.எஸ். சித்ரா. தமிழ் திரையுலகில் சின்ன குயில் சித்ரா என அனைவராலும் அன்போடு அழைக்கப்படுகிறார்.

இசைமைச்சர் இளையராஜா இசையமைத்த ‘சிந்து பைரவி’ படத்தின் மூலம் திரையுலகில் தனது பாடகரங்கத்தை தொடங்கினார். அதன் பின்னர் ஏராளமான சூப்பர்ஹிட் பாடல்களை வழங்கியுள்ளார்.

இன்று வரை கோடிக்கணக்கான மக்களை தனது குரலால் மோஹிப்பவர்.
சித்ரா, விஜய் ஷங்கர் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுக்குப் பிறந்த மகள் நந்தனா, 2002 ஆம் ஆண்டு பிறந்தார். ஆனால், 2011 ஆம் ஆண்டு துரதிருஷ்டவசமாக அவர் உயிரிழந்தார். தன் மகளின் நினைவு நாளான நேற்று, இன்ஸ்டாகிராமில் ஒரு உருக்கமான பதிவு வெளியிட்டுள்ளார் சித்ரா.

அதில், “உன்னை இனி என்னால் தொட முடியாது. உன் பேச்சை கேட்க முடியாது. உன்னை பார்க்க முடியாது. ஆனால், நீ என் இதயத்தில் இருப்பதால் உன்னை எப்போதும் உணர முடிகிறது. என் அன்பே, நாம் மீண்டும் ஒருநாள் சந்திப்போம். உன்னை இழந்த வலி அளவிட முடியாதது. வானத்தில் பிரகாசிக்கும் மிகப்பெரிய நட்சத்திரம் நீ தான் என்பதை நான் அறிவேன். படைப்பாளிகளின் உலகில் நீ நன்றாக வாழ்கிறாய் என்று நம்புகிறேன்” என்று உருக்கமாக கூறியுள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “Bigg Boss கலக்கல் ட்ராமா! பிரஜனை பார்த்த சாண்ட்ரா கதறி அழுது மயக்கம்…!”

More in Featured

To Top