Connect with us

புயல் எச்சரிக்கை : சென்னை பல்கலை மற்றும் அண்ணா பல்கலை தேர்வுகள் ஒத்திவைப்பு..!!

Featured

புயல் எச்சரிக்கை : சென்னை பல்கலை மற்றும் அண்ணா பல்கலை தேர்வுகள் ஒத்திவைப்பு..!!

வங்க கடலில் உருவாக உள்ள மிக்ஜாம் புயலால் தற்போது தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை பல்கலை மற்றும் அண்ணா பல்கலை தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் தற்போது கனமழை பெய்து வருவதால் பெரும்பாலான மாவட்டங்களில் சுழலுற்கேற்ப விடுமுறை அளிக்கலாமா என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது . இந்நிலையில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரும் திங்கட்கிழமை (04.12.23) நடைபெற இருந்த சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இதேபோல் கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் 4-ஆம் தேதி நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும் டிச.3 மற்றும் 4-ஆம் தேதி நடத்த திட்டமிட்டிருந்த தொலைதூர கல்வித் திட்ட தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாகவும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் எப்போது நடக்கும் என்ற அறிவிப்பு பின்னர் அறிவிக்கப்படும் என்றும் இரு பல்கலைக்கழகங்களும் தெரிவித்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top