Connect with us

ரவுடிகளுக்கு எந்த மொழி புரியுமோ அந்த மொழியிலேயே நடவடிக்கை எடுக்கப்படும் – சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் எச்சரிக்கை..!!

Featured

ரவுடிகளுக்கு எந்த மொழி புரியுமோ அந்த மொழியிலேயே நடவடிக்கை எடுக்கப்படும் – சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் எச்சரிக்கை..!!

ரவுடிகளுக்கு எந்த மொழி புரியுமோ அந்த மொழியிலேயே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என புதிதாக சென்னை மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்றுள்ள அருண் தெரிவித்துள்ளார்.

சென்னை பெரம்பூரில் கடந்த 5 ஆம் தேதி இரவு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார் . மக்கள் கூட்டம் நிறைந்த பகுதியில் கட்சியின் மாநில தலைவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சென்னையின் காவல் ஆணையராக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.

இதையடுத்து சென்னை மாநகரின் புதிய காவல் ஆணையராக அருண் இன்று பதவியேற்றுக்கொண்டார். பதவியேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த அருண் கூறியதாவது :

ரவுடிகளை கட்டுப்படுத்துவதே எனது முதன்மையான பணி; ரவுடிகளுக்கு எந்த மொழி புரியுமோ அந்த மொழியிலேயே நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னையில் சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் . குற்றங்களை கண்டுபிடிக்க, போக்குவரத்து சிக்கல்களை சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

ரவுடிகளுக்கு அவர்களுக்கு புரியும் மொழியில் காவல்துறையின் நடவடிக்கை இருக்கும் என்னிடம் பொறுப்பை ஒப்படைத்த முதல்வரின் நம்பிக்கையை நிச்சயம் நிறைவேற்றுவேன் என அருண் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சாய் பல்லவியின் இரவு பழக்கம்: அதற்கான காரணம் என்ன?

More in Featured

To Top