Connect with us

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கே.சி.ஆரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் சந்திரபாபு நாயுடு..!!

Featured

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கே.சி.ஆரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் சந்திரபாபு நாயுடு..!!

எலும்பு முறிவு காரணமானாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தெலங்கானா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் கே.சந்திரசேகர ராவை தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.

தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ் எர்ரவெல்லியில் உள்ள அவரது பண்ணை வீட்டில் தடுக்கி விழுந்ததில், இடுப்பில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் .

சந்திரசேகர் ராவின் இடது இடுப்பு மற்றும் கழுத்துப் பகுதியில் முறிவு ஏற்பட்டுள்ளதால் அவருக்கு தற்போது அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தொடர் சிகிச்சையில் இருந்து வருகிறார் . அவர் முழுமையாக குணமடைய 6 முதல் 8 வாரங்கள் வரை ஆகும் என மருத்துவமனை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கே.சி.ஆரை தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு ஐதராபாத் சோமாஜிகுடாவில் உள்ள யசோதா மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்துள்ளார் . மருத்துவர்களிடம் கேசிஆரின் உடல்நிலை மற்றும் சிகிச்சை குறித்து கேட்டறிந்து விவரங்களை பெற்றார்.

இந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய சந்திரபாபு நாயுடு :

கேசிஆர் விரைவில் குணமடைந்து மீண்டும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். மருத்துவர்கள் கூறியுள்ள தகவலின்படி,கேசிஆர் எந்த பிரச்சனையும் இல்லாமல் பழையபடி இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப அதிக வாய்ப்புகள் இருக்கிறது. கேசிஆர் விரைவில் குணமடைந்து மீண்டும் அர்ப்பணிப்புடன் மக்களுக்காக உழைக்க வேண்டும் என சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  உங்கள் குடும்பத்தின் ஒருவனாக இருப்பேன் – கண்ணீர் மல்க உறுதி அளித்த விஜய்

More in Featured

To Top