Connect with us

விமானங்களில் தொழில்நுட்ப கோளாறு – அதிர்ச்சி தகவலை வெளியிட்ட மத்திய அரசு

Featured

விமானங்களில் தொழில்நுட்ப கோளாறு – அதிர்ச்சி தகவலை வெளியிட்ட மத்திய அரசு

விமானங்களில் அடிக்கடி நிகழும் தொழில்நுட்ப கோளாறு குறித்து மாநிலங்களவையில் அதிர்ச்சி தரும் தகவலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

காசு பணம் அதிகம் வச்சுருக்கும் செல்வந்தர்கள் தேவைக்கேற்ப விமானங்களில் சொகுசு பயணம் மேற்கொண்டு மேற்கொள்கின்றனர் . அதேசமயம் ஒரு முறையாவது இந்த விமானத்தில் பயணம் மேற்கொள்ளவேண்டும் என நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்கள் கனவு கண்டு வருகின்றனர்.

இப்படி இவ்ளோ பணம் கொடுத்து பயணம் மேற்கொள்ளும் இந்த விமானத்தில் சமீப காலமாக அதிக தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்படுவது தொடர் கதை ஆகி வரும் நிலையில் தற்போது இதுகுறித்த விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி 2023ல் ஜனவரி முதல் நவம்பர் வரை இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட், விஸ்தாரா, ஏர் இந்தியா உள்ளிட்ட 10 விமான நிறுவனங்களுக்கு சொந்தமான 406 விமானங்களில் தொழில்நுட்பக் கோளாறுகள் கண்டறியப்பட்டுள்ளன.

இதில் அதிகளவு தொழில்நுட்ப கோளாறுகள் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்களில் (203) கண்டறியப்பட்டுள்ளது .

அதிக தொழில்நுட்பக் கோளாறுகள் கண்டறியப்பட்ட இந்த விமான நிறுவனங்கள் விரைவில் இது குறித்து நடவடிக்கை எடுத்து தங்களது விமானங்களில் பயணம் மேற்கொள்ளும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சேப்பாக்கத்தில் சென்னை அணிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச முடிவு..!!

More in Featured

To Top