Connect with us

“பெண்களை தெய்வமாக மதிப்பதில் தர்மதுரை! இயக்குனர் சீனு ராமசாமியை வச்சு செய்த ப்ளூ சட்டை மாறன்!”

Cinema News

“பெண்களை தெய்வமாக மதிப்பதில் தர்மதுரை! இயக்குனர் சீனு ராமசாமியை வச்சு செய்த ப்ளூ சட்டை மாறன்!”

வழக்கு எண் 18/9, ஜன்னல் ஓரம், பட்டைய கிளப்பணும் பாண்டியா, ஆதலால் காதல் செய்வீர், திரிஷா இல்லைன்னா நயன்தாரா, ஒரு குப்பைக் கதை, சண்டிமுனி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகை மனிஷா யாதவுக்கு சீனு ராமசாமி கொடைக்கானலில் பாலியல் தொல்லை கொடுத்தார் என்றும் இன்று வரை அவரது இடம் பொருள் ஏவல் திரைப்படம் வெளியாகவே இல்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

ஆனால், இயக்குநர் சீனு ராமசாமி தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு சிவகார்த்திகேயன் போல அமைதியாக எல்லாம் இல்லாமல் அதிரடியாக ட்வீட் போட்டு தான் மனிஷா யாதவுக்கு எந்தவொரு தொல்லையும் கொடுக்கவில்லை.

அப்படி செய்திருந்தால் அதன் பிறகு பல ஆண்டுகள் கழித்து வெளியான குப்பைக் கதை படத்தின் இசை வெளியீட்டு விழாவில் எனக்கு எதுக்கு அவர் நன்றி சொல்லணும் என வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

“பெண்களை தெய்வமாக மதிப்பதில் தர்மதுரை. தன் படங்களில் நடிக்கும் நடிகைகளை பத்திரமாக பார்த்து கொள்வதில் மாமனிதன். இடம், பொருள், ஏவல் பார்க்காமல் பெண்களிடம் யாராவது தவறாக நடந்தால்.. அதை தட்டிக்கேட்கும் இடி முழக்கம்.” என வஞ்சப்புகழ்ச்சி அணியில் பங்கமாக சீனு ராமசாமியை ப்ளூ சட்டை மாறன் கலாய்த்துள்ளதாக கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top