Connect with us

பெரியாரை பற்றி தெரிந்துகொண்டு பேசுங்கள்..அண்ணாமலையை விமர்சித்த பொன்முடி!

Politics

பெரியாரை பற்றி தெரிந்துகொண்டு பேசுங்கள்..அண்ணாமலையை விமர்சித்த பொன்முடி!

சமீபமாக அண்ணாமலை பேசியது வைரல் ஆகி வருகின்றது…அதில் முக்கியமாக பெரியாரின் சிலை வைக்கும் நோக்கமே பகுத்தறிவு என்பதற்கு தான்…அடித்தளத்து மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கமேயாகும் ஆகவே அண்ணாமலை தன்னை திருத்திக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் பொன்முடி பேசினார்…அவர் பேசியது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது..

விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை சார்பில் இன்று நடைபெற்ற கலைஞரின் கவிதைகள் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கிய பின் செய்தியாளர்களிடம் பலவற்றை பேசி இருந்தார்..அவர் பல கதைகளை சொல்லி வந்தார்…அப்போது அண்ணாமலை சொல்லியது தவறு என்ற கருத்தை சொல்லி இருக்கின்றார்..

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அதிகாரியானதற்கு காரணமே பெரியார்தான்.தமிழகத்தில் ஆணும் பெண்ணும் சமம் அனைவரும் படிப்பதற்கு பெரியார்தான் காரணம்.வடமாநிலத்தவரும் பெரியாரை ஏற்றுக்கொண்டுள்ளார்…பெரியாரை மிகவும் போற்றுகின்றனர்..அனைவரும் சமம் என்பதை சொல்லியவர் பெரியார்…

தனக்கு ஏதாவது வாய்ப்பு கிடைக்குமா என்ற நப்பாசையில் அவர் பேசிவருகிறார்…பெரியார் அண்ணா, கலைஞர்,காமராஜர் போன்றவர்கள் அடிதட்டு மக்களுக்காகவும் பெண்ணுரிமைக்காக எவ்வளவு பாடுபட்டார்கள் என்பது அவருக்கே நன்கு தெரியும்…தெரிந்தும் அண்ணாமலை பேசியது தவறு என்று சொள்கிறேன்…

பெரியாரின் சிலை வைக்கும் நோக்கமே பகுத்தறிவு அடித்தளத்து மக்களுக்கும் சென்றடையவேண்டும் என்ற நோக்கமேயாகும்…அண்ணாமலை இதை புரிந்து பேசுங்கள்..சிலையை உடைப்பதால் அவரின் பெயர் மாறாது என சொல்லியுள்ளார் பொன்முடி.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Politics

To Top