Connect with us

சீமானுக்கு Wish செய்த தளபதி..அரசியல் Entryக்கு முன் கூட்டத்தை சேர்க்கும் தளபதி!

Politics

சீமானுக்கு Wish செய்த தளபதி..அரசியல் Entryக்கு முன் கூட்டத்தை சேர்க்கும் தளபதி!

நடிகர் விஜய்யின் அரசியல் வருகை விரைவில் இருக்கும் என சொல்லப்பட்டு வருகிறது…அதற்கான பணிகளில் அவர் இறங்கி விட்டார் என்பது அனைவரும் தெரிந்து கொண்டிருப்போம்…

சமீபத்தில் நடந்து முடிந்த லியோ படத்தின் சக்சஸ் மீட்டில் கலந்துகொண்டபோது கூட 2026-ல் கப்பு முக்கியம் பிகிலு என பேசி தன் அரசியல் வருகையை சூசகமாக அறிவித்தார் விஜய்…இதுவே அவரின் அரசியல் வருகைக்கான முன்னோட்டம் என புரிந்தது..

நடிகர் விஜய் சமீப காலமாக அரசியல் தலைவர்களின் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறுவதை வழக்கமாக வைத்துள்ளார்….முன்பெல்லாம் அரவமே காட்டாத அவர் இதற்கு முன்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த அன்புமணி அவர்களுக்கு வாழ்த்துகளை சொல்லி இருந்தார்…

இந்த நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடி வரும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு நடிகர் விஜய் தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்…அப்போது இருவரும் பல கருத்துகளை பகிர்ந்து கொண்டதாக சொல்லப்படுகிறது..

அதனை போல இருவரும் அரசியல் பற்றி நிறைய பேசினார்கள் என்ற தகவலும் வந்து இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Politics

To Top