Connect with us

விஜய் அரசியல் கழகத்துக்கு எதிரான விமர்சனத்தை கொடுத்த பைசன் பட வாத்தியார்

bison vijay

Cinema News

விஜய் அரசியல் கழகத்துக்கு எதிரான விமர்சனத்தை கொடுத்த பைசன் பட வாத்தியார்

Bison Actor: இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் அக்டோபர் 17ஆம் தேதி வெளியான ‘பைசன்’ திரைப்படம், சினிமா ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. துருவ் விக்ரம், பசுபதி, லால், ரஜிஷா விஜயன், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடித்த இந்த படத்தில், உடற்கல்வி ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகரும் இயக்குநருமான மதன் சிறப்பான நடிப்பினால் பாராட்டுக்கள் பெற்றுள்ளார்.

இந்த நிலையில், தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில், மதன் தெரிவித்த கருத்துகள் சமூக வலைதளங்களில் கவனத்தை ஈர்த்துள்ளன. அவர் கூறும்போது, ஒரு கட்சி பொறுப்பாளர் மேடையில் பேசும்போது, “ரசிகர்கள் வேலை விட்டுவிட்டு கூட மாநாட்டுக்கு வருகிறார்கள், இப்படிப்பட்டவர்கள்தான் தேவை” என்று கூறியதைக் கடுமையாக விமர்சித்தார்.

மதன் எதிர்வினையாக, “அவன் வேலை விட்டா, சம்பளம் நீ கொடுக்கப் போறியா?” என்றும், பொது மேடையில் பேசும் ஒருவருக்கு பொறுப்பு இருக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், நடிகர் அஜித் கூறும் போதனையை மேற்கோளாகச் சுட்டிக்காட்டி, வாழ்க்கையின் முக்கியத்துவம் மற்றும் தனி மனித ஒழுக்கம் பற்றியும் பேசினார்.

madhan
madhan

இவர் நேரடியாக எந்த ஒரு தலைவரின் பெயரையும் குறிப்பிடவில்லை என்றாலும், இவை தமிழக வெற்றிக்கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கூறிய பேச்சுக்கே பதிலாகும் என பலர் கருதுகின்றனர். இதனால், இணையத்தில் மதனுக்கு எதிராகவும், ஆதரவாகவும் கருத்துகள் பெய்துவருகின்றன. விஜய் ரசிகர்கள் சிலர் அவரது பேச்சை கண்டிக்க, அஜித் ரசிகர்கள் மற்றும் சமூக பொறுப்புள்ள நெட்டிசன்கள் மதனுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்தப் பேச்சு, தற்போது சமூக வலைதளங்களில் புது விவாதத்திற்கு வழிவகுத்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  Fans mood: இது தான் தீபாவளி gift-ஆ? மொக்கை வாங்கிய பிரதீப்

More in Cinema News

To Top