Connect with us

பிக் பாஸ்: அர்ச்சனாவுக்கு முத்துக்குமரன் ரசிகர்களிடமிருந்து மிரட்டல் மற்றும் அசிங்கமான மெசேஜ்கள்..

Featured

பிக் பாஸ்: அர்ச்சனாவுக்கு முத்துக்குமரன் ரசிகர்களிடமிருந்து மிரட்டல் மற்றும் அசிங்கமான மெசேஜ்கள்..

பிக் பாஸ் 8 சீசனில் போட்டியாளராக உள்ள அருண் பிரசாதின் காதலி மற்றும் முன்னாள் டைட்டில் ஜெயித்த நடிகை அர்ச்சனா ரவிச்சந்திரன், சமீபத்தில் சமூக ஊடகங்களில் தன்னை மையமாக வைத்து வருகின்ற கடுமையான மிரட்டல்களை பகிர்ந்துள்ளார்.

அருணின் நடவடிக்கைகள் காரணமாக வெளியில் எதிர்மறையான விமர்சனங்களும் நெட்டிசன்களின் ட்ரோல்களும் எதிர்கொள்ளும் நிலையில், அர்ச்சனா தனது ட்விட்டர் பக்கத்தில், “மிக அசிங்கமான மெசேஜ்கள், R*ape மற்றும் ஆசிட் வீசிவிடுவதாக மிரட்டல்கள்” வருவதாக தெரிவித்துள்ளார்.

அவர் இதற்கு சான்றாக சில ஸ்க்ரீன்ஷாட்களையும் பகிர்ந்து, “இது ஒரு பெண்ணாக என்னை மிகவும் துயரமடைய செய்கிறது. இதற்கு கடுமையான நடவடிக்கை தேவை” என கோரிக்கை வைத்துள்ளார்.

இச்சம்பவம் சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி, இணையதள துன்புறுத்தலின் எதிர்ப்பு குரல்களை எழுப்பியுள்ள நிலையில், இது குறித்து அதிகாரபூர்வ நடவடிக்கை எடுக்குமா என்பது கவனிக்கப்படும்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “பிப்ரவரியில் கிளம்பும் அஜித் புதிய படம் – ஆதிக் வெளியிட்ட லேட்டஸ்ட் அப்டேட்!”

More in Featured

To Top