Connect with us

மறைந்த இளையராஜா மகள் பவதாரிணியின் பிறந்தநாள்- எமோஷ்னல் பதிவுவை போட்ட இயக்குநர் வெங்கட் பிரபு

Cinema News

மறைந்த இளையராஜா மகள் பவதாரிணியின் பிறந்தநாள்- எமோஷ்னல் பதிவுவை போட்ட இயக்குநர் வெங்கட் பிரபு

உடல்நலக்குறையால் உயிரிழந்த இளையராஜாவின் மகளும் பின்னணி பாடகியுமான பவதாரிணியின் பிறந்தநாளை முன்னிட்டு இயக்குநர் வெங்கட் பிரபு போட்டுள்ள பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் யாராலும் பெற முடியாத புகழை பெற்று திரையுலகின் பொக்கிஷம் என ரசிகர்களால் அன்போடு போற்றப்படுபவர் இசைஞானி இளையராஜ .

இவருக்கு பவதாரணி என்ற மகளும் , கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா என இரு மகன்களும் உள்ளனர் .

மூவருமே தந்தையை போல் இசை சார்ந்த விஷயங்களில் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளனர் அதிலும் குறிப்பாக யுவனின் இசைக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது .

இதில் தந்தை மற்றும் சகோதரர்கள் இசையமைத்த படங்களில் மட்டும் அதிகம் பாடியுள்ளார் பவதாரிணி . இளையராஜா இசையில் பாரதி படத்தில் பாடிய மயில்போல பொண்ணு பாடலுக்கு சிறந்த பெண் பின்னணி பாடகிக்கான தேசிய விருதையும் பவதாரிணி பெற்றுள்ளார் .

இந்நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பவதாரிணி இலங்கையில் சிகிச்சை பெற்று வந்த சிகிச்சை பலனின்றி கடந்த மாதம் 25 ஆம் தேதி உயிரிழந்தார் .

பாவதாரணியின் மரணம் இளையராஜாவின் குடும்பத்தை மட்டும் பாதிக்காமல் ஒட்டுமொத்த திரையுலகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த நிலையில் மறைந்த பின்னணி பாடகி பததாரிணியின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து கூறி அழகிய பதிவு ஒன்று இயக்குநர் வெங்கட் பிரபு. போட்டுள்ளார் .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  "சுறா" வசனம் வைரல் – TVK தலைவர் விஜய்யை குறிவைக்கும் ட்ரோல் அலையால் அரசியல் சூடு!

More in Cinema News

To Top