Connect with us

மகளிர் ஐபிஎல் 2024 : மீண்டும் குஜராத் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டனாக பெத் மூனி நியமனம்

Beth_Mooney

Sports

மகளிர் ஐபிஎல் 2024 : மீண்டும் குஜராத் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டனாக பெத் மூனி நியமனம்

மகளிர் பிரிமியர் லீக் 2024 சீசனுக்கு குஜராத் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டனாக பெத் மூனி செயல்படுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அணியின் துணை கேப்டனாக ஸ்னே ராணா செயல்பட உள்ளார்.

முன்னதாக 2023இல் நடந்த முதல் மகளிர் ஐபிஎல் சீசனின் முதல் ஆட்டத்தில் பெத் மூனி காயமடைந்ததால் அந்த சீசனில் இருந்து முழுமையாக வெளியேறினார். இதையடுத்து ஸ்னே ராணா குஜராத் ஜெயன்ட்ஸ் அணியை சீசன் முழுவதும் வழிநடத்தினார்.

குறிப்பிடத்தக்க வகையில், ஸ்னே ராணா தலைமையில் எட்டு ஆட்டங்களில் இரண்டு வெற்றிகளை மட்டுமே பெற்று குஜராத் ஜெயன்ட்ஸ் மிகவும் மோசமான தோல்வியுடன் தொடரை முடித்தது.

இந்நிலையில், 2024 மகளிர் ஐபிஎல்லுக்கான ஏலத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ் சில சிறந்த வீராங்கனைகளை சேர்த்துள்ளது. பந்துவீச்சு ஆல்ரவுண்டரான காஷ்வீ கௌதமும் இந்த அணியில் இடம் பெற்றுள்ளார். மேலும், 2023 ஆம் ஆண்டின் ஐசிசி மகளிர் வளர்ந்து வரும் வீராங்கனை விருதை வென்ற ஃபோப் லிட்ச்ஃபீல்டையும் இணைத்துக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில், பிப்ரவரி 25 (ஞாயிற்றுக்கிழமை) பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக குஜராத் ஜெயன்ட்ஸ் 2024 சீசனில் தங்கள் தொடக்க ஆட்டத்தை விளையாட உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பேட்டிங்கில் மிரட்டுமா டெல்லி..? டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச முடிவு..!!
Continue Reading
Advertisement
You may also like...

More in Sports

To Top