Connect with us

CSK-வுக்கு டாட்டா காட்டிய பென் ஸ்டோக்ஸ்…நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகல்..!!

Featured

CSK-வுக்கு டாட்டா காட்டிய பென் ஸ்டோக்ஸ்…நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகல்..!!

கடந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் அதிக விலைக்கொடுத்து வாங்கப்பட்ட வீரரான பென் ஸ்டோக்ஸ் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது சென்னை ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் கோலாகலமாக நடைபெற உள்ளது . உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு முன்னதாகவே ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடத்தி முடிக்கப்படும் என்று ஒருபக்கம் கூறப்படுகிறது.

இந்நிலையில் டெஸ்ட் மற்றும் உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் தாய் நாட்டிற்கு விளையாட தயாராக வேண்டி உள்ளதால் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளதாக பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார் .

பென் ஸ்டொக்சின் இந்த முடிவு CSK நிர்வாகமும் சம்மந்தம் தெரிவித்துள்ளன கூறப்படும் நிலையில் ஐபிஎல் மற்றும் CSK ரசிகர்கள் மத்தியில் இந்த செய்தி அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

கடைசியாக நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தின்போது சுமார் 16.25 கோடிக்கு பென் ஸ்டோக்ஸ் CSK அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டார் . தனியொரு வீரரை சென்னை அணியின் நிர்வாகம் இவ்ளோ செலவு செய்து தங்கள் அணிக்காக வாங்கியது குறிப்பிடத்தக்கது .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  உங்கள் குடும்பத்தின் ஒருவனாக இருப்பேன் – கண்ணீர் மல்க உறுதி அளித்த விஜய்

More in Featured

To Top