Connect with us

6 கிலோ தங்க நகைகள், 156 கிலோ வெள்ளி! நடிகர் பாலகிருஷ்ணாவின் சொத்து மதிப்பு..

Featured

6 கிலோ தங்க நகைகள், 156 கிலோ வெள்ளி! நடிகர் பாலகிருஷ்ணாவின் சொத்து மதிப்பு..

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக விளங்கும் நந்தமூரி பாலகிருஷ்ணா, ரசிகர்களிடையே “பாலையா” என்ற பெயரில் பிரபலமாக உள்ளவர். ஆக்ஷன் ஹீரோவாக பல வெற்றிப் படங்களில் நடித்த அவர், ரசிகர்களின் மனதில் தனி இடத்தை பிடித்துள்ளார். பொதுவாக ஒரு ஆக்ஷன் ஹீரோ எதிரிகளை சாடும் போதுதான் காட்சி அதிரடி மாறும். ஆனால் பாலகிருஷ்ணா தனது கையை மட்டும் அசைத்தாலே கார், லாரி உள்ளிட்ட வாகனங்கள் காற்றில் மிதக்கும் காட்சிகள் அவர் நடித்த படங்களில் சாதாரணமாய் அமைந்துள்ளன. இது மற்ற நடிகர்கள் செய்தால் நெட்டிசன்கள் சாடி விடுவார்கள். ஆனால் பாலையா செய்தால், அதற்கு ‘அது தான் டா மாஸ்’ எனும் ஆதரவு கிடைக்கும்.

1974ஆம் ஆண்டு ‘Tatamma Kala’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான பாலகிருஷ்ணா, தொடர்ந்து ‘சுல்தான்’, ‘சிம்ஹா’, ‘லைன்’, ‘N.T.R: Mahanayakudu’, ‘அகண்டா’, ‘வீர சிம்ஹா ரெட்டி’, ‘பகவந்த் கேசரி’, ‘டாக்கு மஹராஜ்’ போன்ற பல ஹிட் படங்களை வழங்கியுள்ளார்.

இன்று தனது 65வது பிறந்தநாளைக் கொண்டாடி வரும் பாலகிருஷ்ணா, ஒரு திரைப்படத்துக்கு ரூ. 20 கோடி முதல் ரூ. 30 கோடி வரை சம்பளமாக பெறுகிறார் எனத் தகவல்கள் கூறுகின்றன. ஹைதராபாத் நகரில் அவர் வசித்து வரும் வீட்டின் மதிப்பு ரூ. 50 கோடி ஆகும். அதனுடன், நடிகர் பாலகிருஷ்ணாவின் மொத்த சொத்து மதிப்பு சுமார் ரூ. 430 கோடி இருக்கிறது எனக் கூறப்படுகிறது. மேலும், அவர் அருகில் 6 கிலோ தங்க நகைகள், 156 கிலோ வெள்ளி மற்றும் 580 காரட் வைரம் உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. எனினும், இவை அனைத்தும் அதிகாரப்பூர்வ தகவல்கள் அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்று நடிகர் பாலகிருஷ்ணாவின் பிறந்த நாளையொட்டி, அவர் தற்போது நடித்து வரும் ‘அகண்டா 2’ திரைப்படத்தின் மாஸ் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. ரசிகர்கள் மத்தியில் இதற்கு மிகுந்த வரவேற்பு கிடைத்து வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top