Connect with us

4rd T20 : இந்திய அணிக்கு எதிராக டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச முடிவு..!! பேட்டிங்கில் மிரட்டுமா இந்திய அணி..?

Featured

4rd T20 : இந்திய அணிக்கு எதிராக டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச முடிவு..!! பேட்டிங்கில் மிரட்டுமா இந்திய அணி..?

இந்திய – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 4 வது டி20 போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது.

விறுவிறுப்பும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்ற உலகக்கோப்பை தொடருக்கு பின் இந்திய – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் டி20 கிரிக்கெட் தொடரை காண ரசிகர்கள் செம ஆவலாக உள்ளனர்.

5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் இதுவரை 3 போட்டிகளில் நடைபெற்று முடிந்த நிலையில் அந்த 3ல் இரண்டு போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது.

இந்நிலையில் இந்திய – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4வது டி20 கிரிக்கெட் போட்டி ராய்ப்பூரில் உள்ள பிரபல கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இந்த போட்டியில் இந்திய அணிக்கு எதிராக டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது. இதையடுத்து ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் இந்திய அணி ட்கப்போது பேட்டிங் செய்ய உள்ளது.

ரசிகர்களின் மிக பெரிய ஆரவாரத்துடன் ராய்ப்பூரில் உள்ள மைதானத்தில் இன்று நடைபெறும் இப்போட்டியில் இந்திய அணி மூன்றாவது வெற்றியை பெற்று தொடரை கைப்பற்றுமா அல்லது மீண்டும் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வியை சந்திக்குமா என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

Continue Reading
Advertisement
You may also like...

More in Featured

To Top