Connect with us

இயக்குநர் அட்லீக்கு கௌரவ டாக்டர் பட்டம் – மேடையில் விஜய் பெயரை சொல்ல அதிர்ந்த அரங்கம்!

Featured

இயக்குநர் அட்லீக்கு கௌரவ டாக்டர் பட்டம் – மேடையில் விஜய் பெயரை சொல்ல அதிர்ந்த அரங்கம்!

‘ராஜா ராணி’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அட்லீ, அதன்பிறகு விஜய்யுடன் இணைந்து ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கி பெரிய பெயர் பெற்றவர். தொடர்ந்து, பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாரூக் கானுடன் இணைந்து இயக்கிய ‘ஜவான்’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.1100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.

இதையடுத்து, தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் திரைப்படத்தில், நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து அட்லீ இயக்கி வருகிறார். இந்த நிலையில், இன்று சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 34வது பட்டமளிப்பு விழாவில், இயக்குநர் அட்லீக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. மேடையில் உரையாற்றிய அவர், மிகுந்த உணர்வுடன் தனது பயணத்தைப் பகிர்ந்துகொண்டார்.

அட்லீ கூறுகையில், “நான் எடுக்கும் படங்களை இங்கிருந்து எடுத்தேன், அங்கிருந்து எடுத்தேன் என்று பலர் சொல்வார்கள். ஆனால் நான் எப்போதும் உண்மையைத்தான் பேசுவேன். இப்போ பொய் சொன்னாலே உடனடியாக இருமல் வந்துவிடுகிறது. எனவே, நான் பார்த்த வாழ்க்கையைத்தான் படம் எடுத்தேன்,” என்றார்.

தொடர்ந்து, “‘பிகில்’ படத்தில் வரும் ராயப்பன் கதாபாத்திரம், J.P.R-ஐ பார்த்துத்தான் உருவாக்கப்பட்டது. அவரைப் பற்றிய விஷயங்கள் பலர் கேள்விப்பட்டிருப்பீர்கள். அவர் படிப்பிற்கு மட்டுமல்ல, விளையாட்டிற்காகவும் பல உதவிகள் செய்தவர். நான் சத்யபாமா கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்தபோது குறும்படம் எடுக்க வேண்டிய சூழ்நிலை வந்தது. அப்போது J.P.R-ஐ சந்திக்க சொன்னார்கள். அவரிடம் கூறியதும், ‘கேமரா எடுத்துக்கோ. சீக்கிரம் இயக்குநர் ஆயிடுவ’னு சொன்னார். அந்த வார்த்தை இன்று நிஜமாகியிருக்கிறது,” என்றார்.

மேலும், “என் வாழ்க்கையில் இன்று நான் இப்படியாக இருக்க, என் மனைவிதான் முக்கிய காரணம். நான் ஒரு நல்ல மனிதராக மாறியதற்கும் என் மகன்தான் காரணம். என் அண்ணன், தம்பியைப் பற்றி சொன்னால் எல்லாருக்கும் தெரிந்திருக்கும். என் அண்ணன் தளபதி விஜய்,” என கூறியதும், அரங்கமே அதிர்ந்தது. இந்த நிகழ்வு இயக்குநர் அட்லீயின் வாழ்க்கையில் முக்கியமான ஒன்று எனலாம். திரையுலக வெற்றிக்கு அப்பால், கல்வி நிறுவனமொன்றால் கௌரவிக்கப்படுவது அவருக்கான பெருமை மட்டுமல்ல, திரையுலகத்திற்கும் பெருமையாகும்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top