Connect with us

தொடர் கனமழை எதிரொலி : 4 மாவட்டங்களில் அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு..!!

Featured

தொடர் கனமழை எதிரொலி : 4 மாவட்டங்களில் அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு..!!

தொடர் கனமழை எதிரொலி காரணமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நாளை (டிச.18) நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தின் பல இடங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது .

இதில் சில பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி அன்றாட தேவைகளை கூட பெற முடியாமல் அவதி பட்டு வருகின்ற்னர்.

இந்நிலையில் நாளையும் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் இந்த 4 மாவட்டங்களில் உள்ள பல்லை மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நாளை (டிச.18) நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மேலும் இந்த பேரிடர் காலத்தில் பொதுமக்கள் தேவையின்றி வெளியில் செல்லாமல் வீட்டுக்குளேயே பாதுக்காப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top