Connect with us

3 மாவட்டங்களில் நாளை நடைபெற இருந்த அண்ணா பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு..!!

Featured

3 மாவட்டங்களில் நாளை நடைபெற இருந்த அண்ணா பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு..!!

தொடர் கனமழையின் காரணமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நாளை நடைபெற இருந்த அண்ணா பல்கலைகழக தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சென்னை உளப்பட 4 மாவட்டங்களை மிக்ஜாம் புயல் ஒரு காட்டு காட்டிய நிலையில் தற்போது புயலே இல்லாமல் கனமழையால் தென் தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரி திருநெல்வேலி நெல்லை தூத்துக்குடி தென்காசி ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது.

தென் தமிழகத்தில் பெய்து வரும் கனமழையால் அப்பகுதிகளில் வசித்து வரும் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் மிக்ஜாம் புயலின்போது சிரமத்தில் இருந்த மக்களை தமிழக அரசு எப்படி மீட்டதோ அதே போல் தென் தமிழகத்தில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கிட பலரும் வலுயுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கனமழை நாளையும் தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நாளை நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

கன மழை எதிரொலியாக பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும் தேர்வு நடைபெறும் புதிய தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top