Connect with us

மனதை உடைத்த செய்தி… பகல்காமுக்கு சுற்றுலா சென்ற ஆண்ட்ரியாவின் உணர்ச்சி மிகுந்த பதிவு!

Featured

மனதை உடைத்த செய்தி… பகல்காமுக்கு சுற்றுலா சென்ற ஆண்ட்ரியாவின் உணர்ச்சி மிகுந்த பதிவு!

நடிகை ஆண்ட்ரியா, தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர். “ஆயிரத்தில் ஒருவன்” படத்தில் நடித்ததன் மூலம் பெரும் வரவேற்பைப் பெற்றார். இதனைத் தொடர்ந்து “வடசென்னை”, “அரண்மனை”, “விஸ்வரூபம்” உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்தார். நடிகையாக மட்டுமல்லாமல், பின்னணி பாடகியாகவும் வெற்றி பெற்றுள்ளார்.

தற்போது, உலகம் முழுவதும் பேசப்படும் விஷயம் – ஜம்மு காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதல். சுற்றுலாவிற்கு சென்ற 27 பேர், தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பல சினிமா பிரபலங்கள் இதை கண்டித்து குரல் கொடுத்து வருகின்றனர். அதற்கிடையில், நடிகை ஆண்ட்ரியா, ஜம்மு காஷ்மீருக்கு முன்பு சென்றிருந்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

“நானும் அந்த இடத்திற்கு சுற்றுலா சென்ற ஒரு பயணிதான். பொதுமக்கள் மற்றும் சினிமா பிரபலர்கள் சென்று வருகின்ற இடத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தும் மனதை இவர்களுக்கு எப்படி வந்தது? இந்த செய்தி என் மனதை உடைத்துவிட்டது.” இந்த பதிவை நேட்டிசன்கள் பெரிதும் பகிர்ந்து வருகின்றனர். தற்போது அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “தி ராஜா சாப்: பிரபாஸின் ஆறாவது 100 கோடி தொடக்க வசூல், திரையரங்குகளில் கொண்டாட்டம்”

More in Featured

To Top