Connect with us

தனுஷின் 55வது படத்தை இயக்கும் ‘அமரன்’ பட இயக்குநர் – வைரலாகும் பூஜா கிளிக்ஸ்..!!

Cinema News

தனுஷின் 55வது படத்தை இயக்கும் ‘அமரன்’ பட இயக்குநர் – வைரலாகும் பூஜா கிளிக்ஸ்..!!

பிரபல தமிழ் திரைப்பட நடிகர் தனுஷின் 55 ஆவது படத்தை அமரன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்திய திரையுலகில் இருக்கும் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் தனுஷின் நடிப்பில் தற்போது பல திரைப்படங்கள் உருவாகி வரும் நிலையில் தற்போது நடிகர் தனுஷ் நடிக்கும் 55 ஆவது திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதன்படி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகி சக்கை போடு போட்டு வரும் அமரன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி தான் தனுஷின் 55 ஆவது படத்தை இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் பூஜை சென்னையில் இன்று சிறப்பாக நடைபெற்ற நிலையில் தற்போது அதன் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top