Connect with us

“அல்லு அர்ஜுனும், அட்லீயும் இணையும் படத்திற்கு இவர்தான் இசையமைப்பாளரா?! Viral!”

Cinema News

“அல்லு அர்ஜுனும், அட்லீயும் இணையும் படத்திற்கு இவர்தான் இசையமைப்பாளரா?! Viral!”

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ’ஜவான்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் செய்து இந்திய சினிமாவில் ஒரு சாதனை செய்தது என்பதும் அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையில் அட்லி இயக்கும் அடுத்த படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது கசிந்து கொண்டிருக்கும் நிலையில் அவருடைய அடுத்த படத்தில் அல்லு அர்ஜுன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

Allu-Arjun-Atlee-Anirudh-Ravichander-6

அல்லு அர்ஜுன் தற்போது ’புஷ்பா’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வரும் நிலையில் அந்த படத்தை முடித்தவுடன் அட்லி – அல்லு அர்ஜுன் இணையும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தை இசையமைப்பாளர் குறித்த தகவல் கசிந்து உள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்க இருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே அட்லியின் முந்தைய படமான ’ஜவான்’ படத்தின் வெற்றிக்கு அனிருத் ஒரு முக்கிய காரணம் என கூறப்பட்ட நிலையில் அட்லி – அல்லு அர்ஜுன் இணையும் படத்திலும் அனிருத் இசையமைக்க இருப்பதால் இந்த படமும் சூப்பர் ஹிட் ஆவது உறுதி என்று திரை உலக வட்டாரங்கள் கூறுகின்றன.

அட்லி, அல்லு அர்ஜுன் மற்றும் அனிருத் என ட்ரிபிள் ஏ ஒரே படத்தில் இணைய இருப்பதால் இந்த படத்திற்கு இப்போதே மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  11 வருட திருமண வாழ்க்கையில் இருந்து பிரிகிறோம் - அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்ட ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி..!!

More in Cinema News

To Top