Connect with us

நடிகர் கமல்ஹாசன் மகள் பெயரில் மோசடி – அதிர்ச்சி தகவல்..

Featured

நடிகர் கமல்ஹாசன் மகள் பெயரில் மோசடி – அதிர்ச்சி தகவல்..

நடிகர் கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். அவரது இரண்டு மகள்களும் நடிகைகளாக செய்து வருகின்றனர். ஸ்ருதி ஹாசன் தற்போது பிஸியாக படங்களில் நடித்துவருகிறார். கமலின் இரண்டாவது மகள் அக்ஷரா ஹாசன், தனுஷ் உடன் நடித்த ஷமிதாப் மற்றும் அஜித்துடன் நடித்த விவேகம் போன்ற படங்களில் நடித்து இருக்கிறார். ஆனால் தற்போது அவர் எந்த புதிய படங்களிலும் நடிப்பதில்லை.

இதையடுத்து, அக்ஷரா ஹாசன் மற்றும் அவரது குடும்பத்தின் பெயரை பயன்படுத்தி மோசடி செய்துவரும் ஒருவர் புகார் எழுந்துள்ளது. இப்ராஹிம் அக்தர் என்ற நபர், அக்ஷரா ஹாசன் படம் தயாரிக்கப் போவதாகவும், அதற்காக ஊட்டியில் அவரது ஆபீஸ் உள்ளதாகவும் பலரிடம் கூறி ஏமாற்றி வருவதாக புகார் கிடைத்துள்ளது.

இதற்கு அக்ஷரா ஹாசன் இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார், “அது முற்றிலும் பொய்யான தகவல். அவருடன் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை. இதுகுறித்து சட்டபூர்வ நடவடிக்கை எடுத்து வருகிறோம். எனவே, அவரிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு வேண்டுகிறேன்.”

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top