Connect with us

தாமதமாகும் அஜித்தின் விடாமுயற்சி – காரணம் என்ன தெரியுமா..?

Cinema News

தாமதமாகும் அஜித்தின் விடாமுயற்சி – காரணம் என்ன தெரியுமா..?

அஜித் நடிப்பில் விடாமுயற்சி படம் விறுவிறுப்பாக உருவாகி வரும் நிலையில் தற்போது இப்படம் வெளியாக தாமதமாகும் என தகவல் வெளியாகி உள்ளது .

தமிழ் சினிமாவில் புகழின் உச்சத்தில் இருக்கும் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். இவரது நடிப்பில் தற்போது வேற லெவலில் உருவாகி வரும் படம் தான் விடாமுயற்சி.

இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கும் இப்படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, அர்ஜுன், பிரியா பவானி ஷங்கர், ரெஜினா, ஆரவ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

அஜர்பைஜான் நாட்டில் பல மாதங்களாக முழு வீச்சில் உருவாகி வந்த இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் தற்போது இப்படப்பிடிப்பை தொடர பெரிய சிக்கல் ஒன்று வந்துள்ளது.

தயாரிப்பு நிறுவனம் தரப்பில் இருந்து நிதி நெருக்கடி இருப்பதன் காரணமாக படப்பிடிப்பு தாமதம் ஆகி வருவதாக தகவல் வெளியாகி வருகிறது . இருப்பினும் இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என தெரிவிவில்லை .

இப்படம் முழுக்க முழுக்க அஜர்பைஜான் நாட்டிலேயே நடைபெற்று வருவதால் ஒரு நாளைக்கு தயாரிப்பு செலவு மட்டுமே ரூ. 50 லட்சத்துக்கும் மேல் ஆகி வருவதாகவும் ஒருபக்கம் கூறப்படுகிறது .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  அருண் விஜய் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் வெளியானது..!!!

More in Cinema News

To Top