Connect with us

நடிகர் அஜித்குமார் மருத்துவமனையில் அனுமதி… ரசிகர்கள் அதிர்ச்சி!

Featured

நடிகர் அஜித்குமார் மருத்துவமனையில் அனுமதி… ரசிகர்கள் அதிர்ச்சி!

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு முத்திரை பதித்திருக்கும் நடிகர் அஜித்குமாருக்கு, சில நாட்களுக்கு முன் பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. இந்த விருது குடியரசுத் தலைவரால் வழங்கப்பட்டது. விருதை பெற்ற அஜித், சென்னை திரும்பிய பிறகு செய்தியாளர்களிடம், “இந்த விருதுக்கு காரணமாக இருந்த அனைவருக்கும் என் நன்றி,” என்று தெரிவித்தார்.

அவரது மனைவி ஷாலினி, “என் கணவருக்கு இந்த விருது கிடைத்தது பெருமையான ஒன்று,” என்று கூறினார். அஜித் ரசிகர்கள் இந்த மகிழ்ச்சியில் இருக்கும்போதே, ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் அஜித், கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. ஆரோக்கிய பரிசோதனைக்காகவே அவர் மருத்துவமனையில் உள்ளார் எனத் தகவல் தெரிவிக்கின்றது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top