Connect with us

அஜித் பரிசு வாங்கும் போது நடந்த நெகிழ்ச்சிகரமான தருணம்!

Featured

அஜித் பரிசு வாங்கும் போது நடந்த நெகிழ்ச்சிகரமான தருணம்!

நடிகர் அஜித் குமார் தற்போது கார் ரேஸில் தனது ஆர்வத்தை மீண்டும் காட்டி வருகிறார். துபாயில் நடந்த 24H ரேஸில் அவரது ரேஸிங் அணி 991 பிரிவில் 3வது இடத்தைப் பிடித்துள்ளது. போட்டி முடிவுக்கு வந்தபோது, அஜித் குமார் பரிசு வாங்கும் போது, அங்கு உள்ள ரசிகர்கள் அவருக்கு பெரும் ஆரவாரத்துடன் வாழ்த்துகள் தெரிவித்தனர்.

அஜித் மேடையில் ஒரு கையில் கோப்பையும், இன்னொரு கையில் இந்திய தேசியக் கொடியையும் வைத்திருந்தார். இச்செயலுக்கு ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர். மேலும், அஜித் தனது மகன் ஆத்விகை மேடையில் ஏற்றி, அவனுக்குக் கோப்பையை கொடுத்து, அதை மக்களுக்கு காட்டியுள்ளார். இது அஜித்தின் குடும்பம் மற்றும் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் தருணமாக அமைந்தது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பதவி கொடுக்காத விஜய் - தாடி பாலாஜியின் சர்ச்சைக்குரிய பதிவு!

More in Featured

To Top