Connect with us

காதலர் தினத்தன்று விடா முயற்சி ஃபர்ஸ்ட் லுக்? குஷியில் தல ரசிகர்கள்

Vidamuyarchi_Poster

Cinema News

காதலர் தினத்தன்று விடா முயற்சி ஃபர்ஸ்ட் லுக்? குஷியில் தல ரசிகர்கள்

நடிகர் அஜித் குமார் நடிப்பில் தயாராகி வரும் விடா முயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

அஜித் குமார் துணிவு படத்திற்கு பிறகு மகிழ் திருமேனி இயக்கத்தில் தனது 62வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு விடாமுயற்சி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. லைக்கா நிறுவனம் படத்தை தயாரிக்கிறது.

படத்தில் அஜித்துடன் அர்ஜூன், த்ரிஷா, பிரியா பவானி சங்கர், ரெஜினா கேசன்ட்ரா மற்றும் ஆரவ் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை அஜர்பைஜானில் நடத்திய படக்குழு அங்கு தொடர்ந்து பனிமழை பொழிந்து வருவதால் படப்பிடிப்பை நிறுத்திவிட்டு இந்தியா திரும்பியுள்ளது. தற்போதுவரை இரண்டு மாதம் ஷூட்டிங் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ரசிகர்களின் ஆர்வத்திற்கு தீனிபோடும் விதமாக வரும் பிப்ரவரி 14 அன்று காதலர் தினத்தை முன்னிட்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரத்தில் பிப்ரவரி 14 அன்று இல்லையென்றால் நிச்சயம் பிப்ரவரி 22 அன்று வெளியாகும் என படக்குழுவில் இருந்து தகவல் கசிந்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஹைதராபாத்தின் அதிரடிக்கு தடைபோடுமா மும்பை..? வான்கடே மைதானத்தில் இன்று பலப்பரீட்சை..!!
Continue Reading
Advertisement
You may also like...

More in Cinema News

To Top