Connect with us

சக நடிகருக்கு விலையுயர்ந்த பொருளை பரிசளித்த அஜித்..!!!

Cinema News

சக நடிகருக்கு விலையுயர்ந்த பொருளை பரிசளித்த அஜித்..!!!

விடாமுயற்சி படத்தில் தன்னுடன் சேர்ந்து நடிக்கும் சக நடிகருக்கு விலையுயர்ந்த பொருளை நடிகர் அஜித் பரிசளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் இருக்கும் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். இவரது நடிப்பில் தற்போது விடாமுயற்சி படம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது.

இந்நிலையில் படப்பிடிப்பின் நடுவே அவவ்போது குட்டிய விடுமுறை எடுத்துக்கொள்ளும் நடிகர் அஜித் தனது பைக் குழுவினருடன் சேர்ந்து நீண்ட நெடு தூரம் பைக் ரைட் சென்றுவிடுவார்.

இந்நிலையில் மகிழ்திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் நடிகர் அஜித்துடன் சேர்ந்து நடித்து வரும் நடிகர் ஆரவ் அஜித்தின் பைக் ரைட் குழுவில் சேர்ந்து அவர்களுடன் தற்போது பைக் ரைடிங் செய்து வருகிறார்.

பொதுவாக தன்னுடன் இருப்பவர்களை நன்றாக பார்த்துக்கொள்ளும் நடிகர் அஜித் தற்போது நடிகர் ஆரவ்வுக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளாராம் .

அதாவது தன்னுடன் சேர்ந்து பைக் ரைடிங் செய்து வருவதால் நடிகர் ஆரவ்விற்கு ரூ. 35 லட்சம் மதிப்புள்ள சூப்பர் பைக் ஒன்றை அஜித் பரிசாக கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “கனவுகளை காதலியுங்கள்” – தமன்னா மாணவர்களுக்கு செய்தி

More in Cinema News

To Top