Connect with us

முயன்றும் கைக்கொடுக்காத இறுதிநேர அதிரடி – பஞ்சாப் அணியை வீழ்த்தி ஹைதராபாத் அபார வெற்றி..!!!

Featured

முயன்றும் கைக்கொடுக்காத இறுதிநேர அதிரடி – பஞ்சாப் அணியை வீழ்த்தி ஹைதராபாத் அபார வெற்றி..!!!

விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வரும் IPL கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சிறப்பாக விளையாடிய ஹைதராபாத் அணி பஞ்சாப் வீழ்த்தி அசத்தியுள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் கடந்த மாதம் 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .

இதில் புகழ் பெற்ற மொஹாலி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் SRH – PBKS அணிகள் பலப்பரீட்சை நடத்தியது .

இந்த போட்டியில் ஹைதராபாத் அணிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச தேர்வு செய்தது .இதையடுத்து பஞ்சாப் அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது .

அணியின் தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் களமிறங்கினர் . இருவரும் அணிக்கு நல்ல தொடக்கத்தை கொடுப்பார்கள் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இருவரும் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தனர்.

இதையடுத்து வந்த மார்க்கரம் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழக்க மறுபுறம் அதிரடியில் மிரட்டிய நிதிஷ் அரைசதம் கடந்து அசத்தினார் ஆனால் அவரும் 64 ரன்களில் ஆட்டமிழக்க அவரை தொடர்ந்து வந்த வீரர்களை அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறினார்.

இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த ஹைதராபாத் அணி 182 ரன்கள் குவித்தது. இதையடுத்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களத்தில் விளையாடியது.

அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன் ஷிகர் தவான் 14 ரன்கள் எடுத்து பின்னர் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இன்னொரு புறம் ஜானி பாரிஸ்டோ ஒரு ரன் கூட எடுக்காமல் மூன்றாவது பந்திலேயே வெளியேறினார்.

அடுத்து வந்த பிரப்சிம்ரன் சிங் 4 ரன்கள், சாம் குரன் 29 ரன்கள், சிக்கந்தர் ரஸா 28, ஷஷாங்க் சிங் 46, ஜிதேஷ் சர்மா 19, அஷுடோஷ் 33 என 20 ஓவர்களில் 180 ரன்கள் மட்டுமே எடுத்த பஞ்சாப் அணி வேறு வழியின்றி தோல்வியை ஒப்புக்கொண்டது . இதன்மூலம் 2 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றி பெற்று அசத்தியுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top