Connect with us

விபத்தின்போது வேலை செய்யாமல் போன AIRBAG – நுகர்வோர் தீர்ப்பாயம் கொடுத்த அதிரடி தீர்ப்பு..!!

Featured

விபத்தின்போது வேலை செய்யாமல் போன AIRBAG – நுகர்வோர் தீர்ப்பாயம் கொடுத்த அதிரடி தீர்ப்பு..!!

விபத்தின்போது வேலை செய்யாமல் போன தனது காரின் AIRBAG குறித்து பாதிக்கப்பட்டவர் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில் நுகர்வோர் தீர்ப்பாயம் அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கி உள்ளது.

சுனில் ரெட்டி என்பவர் ஆசை ஆசையாய் Toyota நிறுவனத்தின் Innova காரை வாங்கி உள்ளார். இதையடுத்து கடந்த 2011ம் ஆண்டு சுனில் அவரது காரில் சென்றபோது விபத்தில் சிக்கி உள்ளது.

இந்த விபத்தில் உயிர் தப்பிய அவர் தனது காரின் Airbag வேலை செய்யாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்த சுனில் இதுகுறித்து வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில் வழக்கில் இன்று முக்கிய தீர்ப்பு வந்துள்ளது . அதில் சுனில் ரெட்டிக்கு ₹32.07 லட்சம் இழப்பீடு அல்லது புதிய காரை வழங்க Toyota நிறுவனத்திற்கு NCDRC உத்தரவு பிறப்பித்துள்ளது.

2011ம் ஆண்டு நடந்த இந்த விபத்தின்போது அவர் பயன்படுத்திய அதே மாடல் காரை வழங்க முடியாத பட்சத்தில், ஆண்டுக்கு 9% வட்டியுடன் ₹32.07 லட்சம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  உங்கள் குடும்பத்தின் ஒருவனாக இருப்பேன் – கண்ணீர் மல்க உறுதி அளித்த விஜய்

More in Featured

To Top