Connect with us

“வேட்டையனுக்கு Tough கொடுக்கும் மொய்தீன் பாய்..! தரமான Mass லுக்கில் தலைவர் ரஜினிகாந்த்!”

Cinema News

“வேட்டையனுக்கு Tough கொடுக்கும் மொய்தீன் பாய்..! தரமான Mass லுக்கில் தலைவர் ரஜினிகாந்த்!”

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 73வது பிறந்தநாள் கொண்டாட்டம் சிறப்பாக நடந்து முடிந்தது. ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது படங்களில் இருந்து அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, முதலில் தலைவர் 170 படத்தின் டைட்டில் டீசர் வெளியானது. தசெ ஞானவேல் இயக்கும் இந்தப் படத்தின் டைட்டில் வேட்டையன் என அறிவிக்கப்பட்டது.

லைகா தயாரிக்கும் வேட்டையன் படத்தில் ரஜினியின் கேரக்டர் செம்ம ஸ்டைலிஷாக இருந்தது. “குறி வச்சா இறை விழணும்” என பஞ்ச் வசனம் பேசி மாஸ் காட்டியிருந்தார் சூப்பர் ஸ்டார். இதனால் வேட்டையன் மோடில் இருந்த ரஜினி ரசிகர்களுக்கு, லால் சலாம் மொய்தீன் பாய் டஃப் கொடுத்துள்ளார். லைகா தயாரிப்பில் ரஜினி நடித்துள்ள இன்னொரு படம் லால் சலாம்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள லால் சலாம் படத்தில் ரஜினி கேமியோ ரோலில் மட்டுமே நடித்துள்ளார். விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவரும் ஹீரோவாக நடிக்க, AR ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். கிரிக்கெட்டை பின்னணியாக வைத்து உருவாகியுள்ள லால் சலாம், அடுத்த மாதம் பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகிறது.

முன்னதாக இந்தப் படத்தின் டீசர் தீபாவளிக்கு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து ரஜினியின் பிறந்தநாள் ஸ்பெஷலாக, லால் சலாம் படத்தில் இருந்து அவரது மொய்தீன் பாய் கேரக்டரின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது. லால் சலாம் படத்தில் மும்பை டான் மொய்தீன் பாய் கேரக்டரில் நடித்துள்ளார் ரஜினி.

இந்த கேரக்டரில் ரஜினியின் ஆக்‌ஷன் ட்ரீட்டாக வெளியாகியுள்ளது லால் சலாம் க்ளிம்ப்ஸ். வேட்டையன் டைட்டில் டீசரில் ரஜினியின் ஸ்டைலிஷ் புல்லரிக்க வைத்தது. ஆனால், லால் சலாம் க்ளிம்ப்ஸ் வீடியோவில் ரஜினியின் ஆக்‌ஷன் தெறிக்கவிட்டுள்ளது. அதேபோல், AR ரஹ்மானின் பின்னணி இசையும் செம்ம மாஸ் காட்டியுள்ளது. இதனால் ரஜினி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top