Connect with us

LIC படத்துக்கு பின் பிரதீப் ரங்கநாதன் நடிக்கவிருக்கும் படத்தின் இயக்குனர் யார் தெரியுமா?!

Cinema News

LIC படத்துக்கு பின் பிரதீப் ரங்கநாதன் நடிக்கவிருக்கும் படத்தின் இயக்குனர் யார் தெரியுமா?!

பிரதீப் ரங்கநாதன் இயக்கிய நடித்த ’லவ் டுடே’ என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அவர் தற்போது கோலிவுட்டின் பிசியான நட்சத்திரமாக மாறி உள்ளார்.

ஏற்கனவே அவர் செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’LIC’என்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார் என்பதும் இந்த படத்தின் பூஜை உடன் கூடிய படப்பிடிப்பு சமீபத்தில் நடந்தது என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் பிரதிப் ரங்கநாதன் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படம் குறித்த தகவல் கசிந்துள்ளது. அசோக் செல்வன் நடித்த ’ஓம் மை கடவுளே’ என்ற ஹிட் படத்தை இயக்கிய இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தை ’லவ் டுடே’ படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் ’எல்ஐசி’ படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்னர் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மகளின் நினைவாக விஜய் ஆண்டனி எடுத்த முடிவு! காரணம் தெரிஞ்சா கண் கலங்கிடுவீங்க…

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top