Connect with us

அஜித்துக்குப் பிறகு விஜய் சேதுபதி – மகிழ் திருமேனியின் மாபெரும் கூட்டணி!

Cinema News

அஜித்துக்குப் பிறகு விஜய் சேதுபதி – மகிழ் திருமேனியின் மாபெரும் கூட்டணி!

அஜித் குமார் மற்றும் இயக்குநர் மகிழ் திருமேனி இணைந்த “விடாமுயற்சி” திரைப்படம் இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியானது. ஆரவ், அர்ஜுன், திரிஷா, ரெஜினா கசாண்ட்ரா, நிகில் நாயர் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இப்போது, “விடாமுயற்சி”க்கு பிந்தைய மகிழ் திருமேனியின் அடுத்த திட்டம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அவர் தனது அடுத்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதியை ஹீரோவாக வைத்து இயக்கவுள்ளார்.

இப்படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், வில்லனாக சஞ்சய் தத் நடிக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

தமிழ் மற்றும் இந்தி ஆகிய இரு மொழிகளில் உருவாகும் இந்த படம் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top